தமிழ் திரை உலகில் செம்பருத்தி எனும் படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரோஜா. அதன் பின்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் ரோஜா நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியாகவும் உள்ளார்.
இந்நிலையில், நடிகை ரோஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ரோஜாவுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் வருகிற மே மாதம் ஏழாம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பேசி உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இயக்குனர்கள், ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜா மிகவும் துணிச்சலான தமிழ்நாட்டின் மருமகள் என தெரிவித்துள்ளனர். மேலும் ரோஜாவுக்கு ஏழாம் தேதி திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…