கருணாஸுக்கு ஜோடியாகும் நடிகை ரித்விகா..?
இயக்குனர் ராம்நாத் இயக்கும் ஆதார் படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடிக்கவுள்ளார்.
நடிகர் கருணாஸ் அடுத்ததாக “ஆதார்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை கருணாஸ் நடித்த அம்பானி சமுத்திரம், ஜீவா நடித்த திருநாள், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 வது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.