மீண்டும் மலையாள திரையுலகில் களமிறங்கும் நடிகை ராசி கன்னா!
மலையாளத்தில் உருவாக உள்ள அந்தாதூன் ரீமேக்கில் நடிகை ராசி கன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியில் ராதிகா, தபு, ஆயுஷ்மான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் அந்தாதூன். தேசிய விருதுகள் பல பெற்ற இந்த திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்களின் இயக்கத்தில் இந்த படம் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இந்த படத்திற்கான மலையாள ரீமேக்கில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே மலையாள திரையுலகில் வில்லன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மலையாள ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தார் ராசி கன்னா. அந்தாதூன் மலையாள ரீமேக் மூலமாக மீண்டும் மலையாள திரையுலகில் இவர் களமிறங்க உள்ளாராம். அந்தாதூன் மலையாள ரீமேக்கில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராசி கன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.