நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்.!
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை ஈசிஆர் சாலையில் வாகன சோதனையின்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்த மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 24 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கார் ஓட்டுநர் செல்வம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பின்னர் சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவைக்கப்பட்டார்.
சென்னையில் கொரோனா காரணமாக மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. இதனால் சிலர் சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊருக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.