விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே..??

Default Image

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாக தகவல். 

இயக்குனர்  புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மாதவன் மற்றும் இருவரும் நடித்து இருந்தனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்தது.படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இதையும் இயக்குனர் புஷ்கர்- காயத்ரி இயக்குகின்றார்கள். தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

இந்த இந்தி ரீ மேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி காணும் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தை பற்றி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விக்ரம் வேதா தமிழில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். தற்போது இந்தி ரீமேக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ராதிகா ஆப்தே விடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்