நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து..!
வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்க திரில்லர் டிவி சீரியலான குவான்டிகோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது அமெரிக்க சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரூசோ சகோதரர்கள் இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் நெற்றி, கன்னம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. நெற்றியிலிருந்து ரத்தம் சொட்ட கூடிய புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram