விஷாலுக்கு ஜோடியாகும் நடிகை பிரியா பவானி சங்கர்..!!

விஷாலின் 32 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சக்ரா படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் தனது 31 வது படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.
அதைபோல் அடுத்ததாக நடிகர் விஷால் அடங்கமறு திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பொல்லாதவன் ஆடுகள் படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது அவர் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிரியா பவானி சங்கர் இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025