ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம்,காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
தற்போது இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை சென்னையில் வைத்து எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…