தனுஷுடன் இணைந்த மெர்சல் நாயகி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தனுஷின் 44 வது படத்தில் நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது D44 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது. அதன்படி இன்று காலை படத்தில் இயக்குனர் பாரதி ராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக நித்யா மேனன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
.@MenenNithya joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @prakashraaj pic.twitter.com/wyUx16agxl
— Sun Pictures (@sunpictures) August 4, 2021