பாகுபலி வெப் சீரிஸ் தொடரில் நடிகை நயன்தாரா..??

பாகுபலி வெப் சீரிஸில் சிறிய வயது சிவகாமி தேவியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, என பல மொழிகளில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜா மௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவியின் சிறிய வயது வாழ்கை குறித்தும், பாகுபலியை வளர்க்கும் கதையையும் வைத்து ஒரு வெப் சீரிஸ் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 200 பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ்ஸை இயக்குனர் ராஜ மௌலி தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வெப் சீரிஸில் சிறிய வயது சிவகாமி தேவியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் நடிகை நயன்தாரா முதன் முதலில் வெப் சீரிஸில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025