எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர்.
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியது தொடர்பாக இவர் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு புகாரின் அளித்தார். இதனையடுத்து, சென்னை சைபர் க்ரைம் போலீசார் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தனர். அதன் பின் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னையை சேர்ந்த ஒருவர் நடிகை மீரா மிதுன் தன்னை பற்றி அவதூறான கருத்துக்கள் பரப்புவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தார். புகார் அளித்ததையடுத்து சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதைபோல் எழும்பூரில், இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டல் ஊழியர் ஒருவரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என்ற இரண்டு பிரிவின் கீழ் எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக மீரா மிதுன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…