பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் நடிகை மஹிமா நம்பியார்.!
பிரபுதேவா பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகரும்,நடன இயக்குனருமான பிரபுதேவா தற்போது பொன் மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக, இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அடுத்ததாக பிரபுதேவா பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தத்தக்கது.