வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்.??

வேதாளம் தெலுங்கு ரி மேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அஜித்தின் பில்லா படத்தின் ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த தெலுங்கு ரீ மேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதைபோல் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு ரி மேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிராஜீவிக்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.