மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் நோக்கி கீர்த்தி சுரேஷ் விமானத்தில் இன்று பறந்துள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகையும் பிரபலமான தமிழ் திரையுலக நடிகையுமாகிய கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து தமிழிலும் இவர் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரிப்பாட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். கீதாகோவிந்தம் எனும் வெற்றி படத்தை இயக்கிய பரசுரம் பெல்லா எனும் இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்ததால் படப்பிடிப்புகள் தாமதப்படுத்தபட்டது. இந்நிலையில், படப்பிடிப்பு நடத்துவதுதற்காக தற்பொழுது துபாய் நோக்கி படக்குழுவினர் செல்கின்றனர் அமெரிக்காவில் நடந்த திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு தளம் மாற்றப்பட்டுள்ள நிலையில், தான் துபாய்க்கு செல்லக்கூடிய புகைப்படம் ஒன்றை கீர்த்தி சுரேஷ் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விமானத்தில் இருக்கும் படி கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…