தனுஷிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவிற்கு சென்று தி க்ரே மேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு D43 படத்தின் இரண்டாவது கட்ட படத்தில் கலந்துகொள்வார். அந்த படத்தில் நடித்து முடித்தவுடன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார். அதற்கு பிறகு, மித்ரன் ஜவஹர், ராம்குமார், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது, ஆனால் இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதது தான் உண்மை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் உப்பெனா படம் மூலம் புகழ்பெற்ற கீர்த்தி ஷெட்டி தனுஷிற்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…