டைட்டானிக் திரைப்படம் குறித்து மனம் திறந்த நடிகை கேட் வின்ஸ்லெட்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டைட்டானிக் திரைப்படத்தை விரும்பி பார்ப்பதுண்டு. ஆங்கில படமான டைட்டானிக் படத்தில், நாயகியாக நடிகை கேட் வின்க்லெட்டும், நாயகானாக டிகாப்ரியோவும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 1997-ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டைட்டானிக் திரைப்படம் எங்கு பார்த்தாலும் பரவி இருந்தது. அப்படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து, நான் இந்தியாவின் இமயமலை பகுதியில், முதுகில் பைகளை மாட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தேன்.
அப்போது 85 வயது மதிக்கத்தக்க முதியவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு கண் சரியாகத் தெரியவில்லை. என்னை பார்த்து அவர் “நீ டைட்டானிக்” என்று கூறினார். நான் ஆமாம் என்று தலையாட்டினேன். அவர் தனது கைகளை அவரது இதய பகுதியில் வைத்துக்கொண்டு நன்றி என்று சொன்னார். நான் உணர்ச்சிப் பெருக்கில் அழுதுவிட்டேன். அந்தப் படம் எவ்வளவு மக்களை என கொடுத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.’ என தெரிவித்துள்ளார்.