டாஸ்மாக் கடைகளை திறக்கும் போது இவைகளையும் திறக்கலாமே – நடிகை கஸ்தூரி.!
டாஸ்மாக் கடைகளை திறக்கும் போது இவைகளையும் திறக்கலாமே என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்தது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இரண்டு தினங்களுக்கு முன்னரே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பயமின்றி சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மது வாங்க வரிசையில் நின்று முண்டியடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எல்லைகளில் உள்ள மக்களில் சிலர் அண்டை மாநிலங்களில் சென்று கூட்ட கூட்டமாக மதுபாட்டில்கள் வாங்கியதால் சமூக விலகல் காற்றில் பறந்தது. இதனால் தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் கூடிய இன்று முதல் டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இன்று காலையிலே குடிமகன்கள் உச்சக்கட்ட சந்தோஷத்தில் டோக்கன்களை பெற்று வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த உத்தரவை பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டித்தும், பலர் டாஸ்மாக் கடைகளை மூடவும் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
வழக்கமாக டாஸ்மாக் கடைகள் திறப்பதை குறித்த பல கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது டுவிட் ஒன்னற பதிவிட்டுள்ளார். அதில், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முடிவை எடுத்த தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளையும், கோயில்களையும் ஏன் திறக்கக் கூடாது. ஏனென்றால் டாஸ்மாக் கடைகள் அரசுக்கு வருமானத்தை தரும், ஆனால் பனள்ளிகளும், கோயில்களும் அப்படி இல்லையே, அது ஒழுக்கமான சமூகம் பற்றியது அல்ல என்று கூறியுள்ளார். தற்போது இந்த டுவீட்டுக்கு பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
If Liquor shops can be opened , why not temples and schools ? Oh Yes. Its all about revenue, not about what a decent society deserves. #COVIDIOTS
— Kasturi Shankar (@KasthuriShankar) May 6, 2020