இலங்கையின் புதிய அதிபரை பங்கமாக கலாய்த்த நடிகை கஸ்தூரி..!

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தேர்தலையொட்டி பல இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டது .கடந்த ஏப்ரல் மாதம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த பாதுகாப்பு உடன் தேர்தல் நடைபெற்றது.
ஆனால் அதையும் மீறி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கும் இடையே தான் போட்டி நிலவியது .
நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகள் பெற்றார்.
பதவியேற்றார் கோத்தா பய்யா .
….இதுவும் கடந்து போம். #தமிழ்வாழ்க #தமிழினம்ஓங்குக
— Kasturi Shankar (@KasthuriShankar) November 18, 2019
ஆனால் சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக ஓட்டுகள் பெற்றார். இதனால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் கோத்தபய ராஜபக்சே பதிமூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் கோத்தபய 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ஓட்டுகளும் , சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 ஓட்டுகள் பெற்றார். இதைத்தொடர்ந்து அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாவதற்கு முன் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்
நேற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 வயதான கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றார்.இந்நிலையில் நேற்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “பதவியேற்றார் கோத்தா பய்யா . ….இதுவும் கடந்து போம்.” என ட்விட் செய்து உள்ளார்.இதற்கு சில ஏன் அசிங்கமாக பேசுறீங்க என பதிலளித்து உள்ளனர்.