தானமாக தனது பிளாஸ்மாவை கொடுக்கும் நடிகை கனிகா கபூர்!
கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மீண்டு வந்த நடிகை கனிகா கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விரும்புகிறாராம்.
பாலிவுட் திரையுலகின் பிரபலமான பாடகியாக வலம் வந்த நடிகை கனிகா கபூருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டு, அவரை தனிமையாக இருக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டார். ஆனால், அவர் சொல் மீறி வெளியில் சென்று பார்ட்டிகளில் கலந்துகொண்டதால் பலருக்கும் கொரோனா பரவ நேர்ந்தது.
இந்நிலையில், பல சோதனைகளுக்கு பிறகு அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது பிளாஸ்மாவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர விரும்புவதாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய பேராசிரியர் துலிகா சந்திரா, ஏற்கனவே சிலர் இது போன்ற பிளாஸ்மா தானம் செய்ததால் இதுவரை இருவர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், 50 கிலோவுக்கு அதிகமான உடல் எடையையும், ஹீமோகுளோபின் அளவு 12.5 புள்ளிகளுக்கு அதிகமாகவும் கொண்டவர்கள் தான் இந்த பிளாஸ்மா தானம் செய்ய முடியுமாம்.
எனவே, கனிகா கபூரிடம் இது தொடர்பான சோதனை மேற்கொண்டு அவர் பிளாஸ்மா தானத்துக்கு தகுதியானவர் என்றால் அவரிடமிருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு மற்ற COVID -19 நோயாளிகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.