ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்…! புகைப்படம் உள்ளே…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்து வருவதை அடுத்து, திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைவி திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்-10-ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் இன்று மெரினா கடற்கரை உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத் pic.twitter.com/eVsrQqrrNj
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 4, 2021