பாபநாசம் இரண்டாவது பாகத்தில் கமலிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது . மோகன்லால்,மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரிஷ்யம்-2 படமானது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தினையும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் தமிழில் பாபநாசம்-2 என்ற பெயரில் உருவாகும் இந்த பாகத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாகவும் ,அதே நேரத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தமிழில் கமலஹாசனிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…