தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோண் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடித்துள்ள நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 169-படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசுங்கு பெரிய சாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் தலைவர் 169 குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தீபிகா படுகோணிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கேஎஸ் ரவி குமார் இயக்கத்தில் உருவாகவிருந்த ராணா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோண் நடித்து வந்தார். அதன் பிறகு ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் படம் அப்படியே கைவிடப்பட்டது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…