தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்சையில் சிக்கிய நடிகை ..!

- நடிகை ஷே மிட்செல் தனது பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
- அதற்கு ரசிகை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அவர் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையைப் முகத்தை பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் பிரபல நடிகை ஷே மிட்செல் தனது பெண் குழந்தை அட்லஸ் நோவாவுக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஷே மிட்செல் “மார்பக நண்பர்கள்” என தலைப்பு வைத்து பதிவிட்டு உள்ளார். பதிவிட்ட சிலமணி நேரத்திலே தீயாக பரவியது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் லைக்குகளைப் பெற்றது. இந்த புகைப்படத்திற்கு சிலர் கமெண்ட் செய்தனர்.
அதில் ஒரு பெண் நான் ஷே மிட்செல் ரசிகை ஆனால் இந்த படம் மற்றவர்க்ளின் கவனத்தை ஈர்ப்பதற்காக புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அவர் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையைப் முகத்தை பார்க்கவில்லை, அவர் கேமராவை தான் பார்க்கிறார் என கருத்து தெரிவித்தார்.
இதற்கு ஷே மிட்செல் பெண் ரசிகைக்கு பதிலளித்து உள்ளார்.அதில் குழந்தையை வளர்க்கும் புத்தகத்தை நான் தவறவிட்டேன்.உங்கள் பெற்றோரின் குழந்தை வளர்க்கும் புத்தகத்தை நான் எங்கு டவுன்லோடு செய்யவேண்டும் எனச்சொல்லுங்கள் நான் அதை பெற்று கொள்கிறேன் என பதிலளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025