மறைந்த முன்னாள் காதலர் சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடனமாடும் நடிகை அங்கிதா.!வைரல் வீடியோ உள்ளே.!

Default Image

மறைந்த முன்னாள் காதலரான சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை அங்கிதா லோகண்டே விருது விழாவில் நடனமாடவுள்ளார் .

ஜீ ரிஷ்டே விருதுகளில் நடிகை அங்கிதா லோகண்டே மறைந்த முன்னாள் காதலரான சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடனம் ஒன்றை ஆடவுள்ளார்.அதற்கான பயிற்சியை மேற்கொள்ளும் போது எடுத்த ஸ்னீக் பீக் வீடியோவை பகிர்ந்த அங்கிதா ,இது ஒரு வேதனையான அனுபவம் என்றும் ,இந்த நேரத்தில் இது செய்வது கடினமாக இருப்பதாகவும்,தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரது மறைவிற்கு நியாயம் கோரிய பிரபலங்களில் நடிகை அங்கிதாவும் ஒருவர்.இவர்கள் இருவரும் ஜீ. தமிழிலீ ஒளிப்பரப்பான பவித்ரா என்ற தொடரில் இணைந்து நடித்து ,அதன் முதல் காதலில் விழுந்தனர் . அதனையடுத்து 6 வருடங்கள் காதலித்த இவர்கள் இருவரும் 2016-ல் பிரிந்தனர் .

அதனையடுத்து நடிகர் சுஷாந்த் அவர்கள் ரியா சக்ரவர்த்தியையும் , அங்கிதா தற்போது விக்கி ஜெயினையும் காதலித்து வருகிறார்.மறைந்த முன்னாள் காதலரான சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அங்கிதாவின் இந்த நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்