வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகர் அமலாபால் மற்றும் பகத் பாசில் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது
அமலாபால் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை சுமார் 1.12 கோடிக்கு வாங்கினார் அவர் இந்த காரை வாங்க புதுச்சேரியில் தான் வாடகைக்கு குடியிருப்பதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கியுள்ளார். இதனால் அவர் 18 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியை கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.கார் பதிவு செய்தது புதுச்சேரியில் என்பதால் அவர்கள்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பி இந்த வழக்கை முடித்துக்கொண்டனர் கேரளா போலீசார் .
இவர் மட்டுமல்லாமல் பகத் பாசில் மற்றும் பாஜக எம்பியும் நடிகருமான சுரேஷ் கோபியும் ஆகியோர் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டனர். பகத் பாசில் இந்த முறைகேடு பற்றி தனக்கு தெரியாது என்று கூறி அதற்கான அபராதத் தொகையை வரியை செலுத்தினார். இதனால் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது .ஆனால் சுரேஷ் கோபியின் வழக்கோ விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையில் அமலாபாலின் வழக்கை புதுச்சேரி போக்குவரத்து துறை தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸ் முடித்துவைத்துள்ளனர் .இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்துறை கேரளா கவல்த்துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.இந்த போலி பதிவு சம்பந்தமான நிருபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…