தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் தெலுங்கில் கோபி கணேஷ் அவர்களின் இயக்கத்தில் கோட்சே எனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
மலையாள திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பின் விஷால் நடித்து அண்மையில் வெளியாகிய ஆக்ஷன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய இவர் அதன்பிறகு தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது மலையாளம் தமிழ் ஆகிய இரு திரையுலகிலும் கலக்கி வரும் இவருக்கு தெலுங்கு திரையுலகிலும் கதவுகள் திறந்து உள்ளது. இயக்குனர் கோபி கணேஷ் அவர்களின் இயக்கத்தில் சத்யதேவ் நடிக்கும் கோட்சே எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.