கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதனையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, தலைவர், இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. மொத்தம் பதிவான 2500 வாக்குகளில் சுமார் 1150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டன.
இந்த தேர்தல் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து நாசர், விஷால் ஆகியோர் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் செல்லும் என்றும், ஓட்டுகளை எண்ணவும் உத்தரவிட்டது.
வாக்கு எண்ணிக்கை
உய்ரநீதிமன்ற உத்தரவுப்படி, நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.இந்த வாக்கு எண்ணிக்கையில் துணை தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணியின் பூச்சி முருகன் முன்னிலையில் இருந்தார்.
வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
இந்த நிலையில், ஐசரி கணேஷ் தரப்பு நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட ஐந்து வாக்குச்சீட்டுகள் கூடுதலாக உள்ள உள்ளதாக புகார் அளித்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…