நடிகர் சங்க தேர்தல் : விஷால் – கார்த்தி வெற்றி..!

Published by
லீனா

கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதனையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, தலைவர், இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. மொத்தம் பதிவான 2500 வாக்குகளில் சுமார் 1150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டன.

இந்த தேர்தல் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து நாசர், விஷால் ஆகியோர் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் செல்லும் என்றும், ஓட்டுகளை எண்ணவும் உத்தரவிட்டது.

வாக்கு எண்ணிக்கை

உய்ரநீதிமன்ற உத்தரவுப்படி, நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் முடிவுகள் 

நடிகர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்.

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

9 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

9 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

11 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

12 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

12 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

12 hours ago