ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா, தற்போது நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு கிடைத்துள்ளது.
அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.
மேலும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகர்களான பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025