தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான 2019- 2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்யராஜ் தலைமையான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் சங்க விஷாலும் , நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மேலும் நடிகர் விஷால் , நாசர் மற்றும் கார்த்தி நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்தது எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் இருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி கல்யாணசுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அதில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது எனவும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் நடிகர் சங்க மறு தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நடத்த நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் நடிகர் விஷால் , நாசர் மற்றும் கார்த்தி தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. புதிய தேர்தல் நடத்தும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரி பதவியில் தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது உள்ளது. கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…