‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக கஷ்டப்பட்டிருக்கும் நடிகர்கள், நடிகைகள்..! வைரல் வீடியோ.!!
கபாலி, காலா படத்திற்கு பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது . அதற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக மாற்றினார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியாகியது.
இந்த நிலையில் தற்போது சார்பட்டா படத்தில் இடம்பெற்றுள்ள கேரக்டர்கள் குறித்து நாளை வெளியாகும் என இயக்குனர் ப.ரஞ்சித் நேற்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்காக கஷ்டப்பட்டிருக்கும் நடிகர், நடிகைகள் நடித்த மேக்கிங் வீடியோவை ஆர்யா தற்போது வெளியிட்டுள்ளார். படத்திற்காக அவர் உடல் எடையை அதிகரித்து கடின முயற்சிகள் எடுத்துள்ளார்.
Here’s an introduction to the world of #Sarpatta ????????
Thank you @beemji sir for bringing the best of us ???????? https://t.co/Hjmo3jk5Yr @K9Studioz @officialneelam@muraligdop @Music_Santhosh @EditorSelva @officialdushara @KalaiActor @Actorsanthosh @johnkokken1 @lovekeegam— Arya (@arya_offl) March 28, 2021