நடிகர் யாஷ் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டதால் திரையுலகில் பணிபுரியும் தினசரி தொழிலாளர்கள் பலரும் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதனால் தொழிலாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதிஉதவியை அளித்து வருகின்ற நிலையில் தற்போது யாஷ் மொத்தமாக ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் கேஜிஎப் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற யாஷ் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார். இந்தத் தொகை சுமார் 3 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் பிரித்து அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…