ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் போது செல்போன் திருட்டு.! – நடிகர் விமல் புகார்.!

தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திருமணவிழாவில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது, திருமண விழாவில் தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.
தனது செல்போனை இருக்கையில் வைத்து விட்டு அங்கு வந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துவிட்டு கீழே பார்க்கும் போது அந்த இடத்தில் செல்போன் காணாமல் போனதாக நடிகர் விமல் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025