ஆஸ்கர் உறுப்பினர் பதவி – ராஜினாமா செய்த வில் ஸ்மித்!

Default Image

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தை நக்கலடித்துள்ளார்.

சக நடிகர் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்:

WillSmith

இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு ஆஸ்கார் விருது விழாவில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

மன்னிப்பு:

பின்னர்,வன்முறை என்பது எந்த விதத்திலும் தவறானது தான் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என வில் ஸ்மித் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படையாக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

ஆஸ்கார் குழு – போலீஸ் தயார்:

இந்த விவகாரத்தில் ஆஸ்கார் குழு கண்டனம் தெரிவித்து,கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் மேடையில் வைத்து அறைந்த உடனேயே,அவரை கைது செய்வதற்கு போலீஸ் தயாராக இருந்ததாக கூறியது.ஆனால் கிறிஸ் ராக் வில் ஸ்மித்தை கைது செய்ய வேண்டாம் எனவும்,தான் நன்றாக  இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வில் ஸ்மித் ராஜினாமா:

இந்நிலையில்,ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்தது சர்ச்சையான நிலையில் ஆஸ்கர் அகாடமி எடுக்கும் நடவடிக்கையை ஏற்பதாக கூறி உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் விலகியுள்ளார்.

மன்னிக்க முடியாதது:

மேலும்,இது தொடர்பாக ராஜினாமா கடிதத்தில் வில் கூறியிருப்பதாவது: “அகாடமியின் விசாரணை நோட்டீசுக்கு நான் நேரடியாகப் பதிலளித்துள்ளேன்.மேலும் எனது நடத்தைக்கான எந்தவொரு மற்றும் அனைத்து விளைவுகளையும் நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன். 94-வது அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் எனது செயல்கள் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும், மன்னிக்க முடியாததாகவும் இருந்தது.

காயப்படுத்தியவர்களின் பட்டியல் நீளம்:

நான் காயப்படுத்தியவர்களின் பட்டியல் நீளமானது, அதில் கிறிஸ், அவரது குடும்பத்தினர், எனது அன்பான நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள், கலந்து கொண்டவர்கள் மற்றும் வீட்டில் உள்ள உலகளாவிய பார்வையாளர்கள் உள்ளனர். அகாடமியின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டேன்.நான் மனம் உடைந்துவிட்டேன்.மேலும் திரைப்படத்தில் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை ஆதரிக்க அகாடமி செய்யும் நம்பமுடியாத வேலையை மீண்டும் செய்ய அனுமதிக்க விரும்புகிறேன்.

எந்தவொரு விளைவுகளையும் ஏற்றுக்கொள்வேன்:

எனவே, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்,மேலும் வாரியம் பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு விளைவுகளையும் ஏற்றுக்கொள்வேன்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்