பொன்மகள் வந்தாள் தொடர் தம்பதியரின் காதல் விவகாரம் .! உண்மையை கூறிய நடிகர்.!

Published by
Ragi

நடிகர் விக்கி பேசியதாவது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் , வேறெதுவும் எங்களுக்குள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் மேக்னா . அதனையடுத்து பிரபு சாலமனின் கயல் படத்திலும் நடித்தார் மேக்னா வின்சென்ட். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டோமி டான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டோமி டான் சீரியல் நடிகையான டிம்பிள் ரோஸின் சகோதரர் ஆவர். இந்த நிலையில் டான் டோமிக்கும், மேக்னா வின்சென்ட்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்தனர்.

அதனையடுத்து குடும்பநல நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. மேலும் டான் டோமி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், விரைவில் திருமணம் இருக்க கூடும் என்றும் கூறப்பட்டது. மேலும் மேக்னா வின்சென்ட் அவர்களும் தன்னுடன் பொன்மகள் வந்தாள் தொடரில் நடித்த விக்கி என்ற நடிகரை மறுமணம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தொடரின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், அதனால் தான் கணவருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. 

ஆனால் நடிகர் விக்கி இதனை மறுத்து பேசியதாவது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் , வேறெதுவும் எங்களுக்குள் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அனைத்து குடும்பங்களில் இருப்பது போல் எங்கள் குடும்பத்திலும் பிரச்சினைகள் உள்ளதாகவும், அதனை நாங்களே பார்த்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார். மேலும் எனக்கு 6வயதில் ஒரு மகன் உள்ளதாகவும், அவனுடைய வாழ்க்கையும், எதிர்காலமும் எனக்கு முக்கியம் என்றும், எங்கள் வாழ்க்கையை தயவுசெய்து கெடுக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார். மேக்னாவின் கணவரோ விவாகரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது

Published by
Ragi

Recent Posts

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

36 minutes ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

1 hour ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

3 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

4 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

4 hours ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

6 hours ago