Actor Vivek Daughter:நகைச்சுவை நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சிரஞ்சீவி பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021-ல் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக் இல்லத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
unknown nodeActor Vivek Daughter Wedding [file image]மறைந்த நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு சிறந்த மனிதாபிமானம் கொண்ட அவர் ஏப்ரல் 2021-ல் மாரடைப்பால் உயிர் இழந்தார். சென்னையில் உள்ள அவரது இல்லம் அருகே, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
