சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொண்டு வருகிறார்கள். சிலர் பயந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தாமல் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் சேர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் பேசிய நடிகர் விவேக் கூறுகையில், ” அணைவரும் கொரோனா தடுப்பூ செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. கொரோனா தடுப்பூசிதான் மக்கள் உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் உயிரிழப்பு என்பது ஏற்படாது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…