கொரோனா தடுப்பு பணிகளுக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விவேக்!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இலைகண்ர்கள் கொரோனா நிவாரணத்தை மக்களுக்கு எடுத்து செல்ல முன்வர வேண்டும். வேற்றுமைகள் பார்க்காமல், கொரோனாவை எதிர்த்து நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்’ என்று தெரிவித்துள்ளார்.