சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். விவேக்கை பொறுத்தவரையில், சினிமாவின் மீது மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும், ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். இதனையடுத்து விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ நீ உண்மையில் கடவுளுக்கு சேவை செய்ய விரும்பினால், ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் துன்பத்தில் இருப்போருக்கும் உதவு’ என்ற விவேகானந்தரின் பொன் மொழியை பதிவிட்டு, ரஜினிக்கு தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
நீ உண்மையில் கடவுளுக்கு சேவை செய்ய விரும்பினால் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் துன்பத்தில் இருப்போருக்கும் உதவு!- சுவாமி விவேகானந்தர். மிக்க நன்றியும் பாராட்டும் @rajinikanth sir???????? pic.twitter.com/TdTHKpIk0a
— Vivekh actor (@Actor_Vivek) October 21, 2019