குட்டி ஏஞ்சலை வரவேற்கும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர்.!

நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா , பொன்னியின் செல்வன் , துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மகன் துருவ் விக்ரமுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் . இன்றும் இளமையாக தோற்றமளிக்கும் இவர் தற்போது தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார் . நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கு நேற்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கும் , மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உறவினருமான மனுரஞ்சித்திற்கும் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் விக்ரமின் மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் , அதை அவரது குடும்பத்தினர் திருவிழா போன்று கொண்டாடியதும் அனைவரும் அறிந்ததே .
இந்த நிலையில் நேற்று மதியம் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது . தாத்தாவாக பதவி உயர்வு பெற்ற விக்ரம் சந்தோசத்தில் துள்ளி குதிக்கிறார் . இன்றும் ஹீரோவாக வலம் வரும் விக்ரம் தாத்தா என்பது அனைவருக்கும் அதிர்ச்சி தான் . தற்போது விக்ரம் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025