லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக புதிய எமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் மீண்டும் 50% பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டது.
இதனிடையே, மாஸ்டர் படத்தின் டீசர் ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் பிடித்ததாக அமைந்தது. பல சாதனைகளையும் படைத்தது. 2020-ஆம் ஆண்டின் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பெயரில் மாஸ்டர் தான் இடம்பிடித்தது. இதனை ட்விட்டர் இந்தியாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மாஸ்டர் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னட, தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்து நேரடியாக இந்திய மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், மாஸ்டர் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜி ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் விஜய் அவரது ட்விட்டர் பக்கத்தில் MasterFilm என்ற ஹாஸ்டேக் பயன்படுத்தி, ட்விட்டர் இந்தியாவை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதனை ட்விட்டர் இந்தியா, புத்தாண்டு வாழ்த்துக்கள் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் ரசிகர்கள் என்று கூறி, மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜிகளுடன் விஜயின் டீவீட்டை ரீட்விட் செய்துள்ளது. உடனே ரசிகர்கள் மாஸ்டர் ஹாஸ்டேக்கை பயன்படுத்தி ட்விட் செய்து வருகின்றனர்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…