இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை – 800 திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்றே அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனிடையே இன்று முத்தையா முரளி தரன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில், வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.சிலருக்கு என் மேல் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். முத்தையா முரளி தரன் அறிக்கையை மேற்கோள்காட்டி நடிகர் விஜய் சேதுபதி ,தனது ட்விட்டர் பக்கத்தில் ,நன்றி ..வணக்கம் என பதிவிட்டார்.
இந்நிலையில் 800 திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில் ,நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம்,இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.