நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவு!

கடந்த இரு நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவு அடைந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிந்து வருமான வரித்துறை விஜயை அவரது காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை வீட்டில் வருமானதுறை தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து விஜயின் மற்றொரு வீடான பனையூர் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் சுமார் 23 மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை நடந்து வந்தது. அதில் விஜய்யிடமும் அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்தது. மேலும் அந்த சோதனையில் விஜயின் பிகில் படத்தில் விஜயின் சம்பளம் ரூ.30 கோடி என தகவல் வெளியிட்டது.
இதனிடையே சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும், ரூ.300 மதிப்புள்ள கணக்கில் காட்டாத ஆவணங்கள் பரிமுத்தல் செய்தனர் என குறிப்பிட்டதக்கது.