புற்றுநோயால் அவதிப்படும் நடிகர் தவசி .!உதவிய பிரபலங்கள்.!

Default Image

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு சூரி , சிவகார்த்திகேயன் மற்றும் திமுக எம்எல்ஏ ஆகியோர் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர்

தமிழ் திரை உலகில் பிரபலமான துணை நடிகராக வலம் வருபவர் தான் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். முரட்டு மீசையுடன் கிராமத்து தோற்றத்தில் காணப்படக்கூடிய இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாட்டசாட்டமான உடலுடன் முரட்டு மீசையுடன் இருக்கும் இவர் முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ந்து போயுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் உதவுமாறு சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அதன்படி வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் தவசி நடிகர் சூரிக்கு தந்தையாக நடித்திருந்தார் . தற்போது சூரி தவசிக்கு உதவும் நோக்கில் ரூ.20,000 நிதியுதவி வழங்கி உதவியுள்ளார் . அதனுடன் தவசிக்கு உதவியாக மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 3 நேரம் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்ததுடன் மேலும் உதவி செய்ய தயாராக உள்ளதாக சூரி கூறியுள்ளார்.

அதனையடுத்து திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-ஆன மருத்துவர் சர்வணன் அவர்கள் தவசியை தனது மருத்துவமனையிலே அனுமதித்து அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்று சிகிச்சை அளித்து வருகிறார் . மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கி உதவியுள்ளதாக கூறப்படுகிறது.. அதனை தவசியிடம் சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்ற தலைவரான மோகன் நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். மேலும் பல பிரபலங்களும் , ரசிகர்களும் தவசிக்கு உதவ தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்