#BREAKING : தோனியின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த ஹீரோ தற்கொலை

Default Image

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி.இவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கடத்த 2016 -ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் M.S. Dhoni: The Untold Story.இந்த படத்தில் தோனியின் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் சுசாந்த் சிங் ராஜ்புத் .இவருக்கு வயது 34 ஆகும். பி.கே. , கேதர்நாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  

இந்நிலையில் இன்று  நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துள்ளார். மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.2 நாட்களுக்கு முன்னர் தான் சுசாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திசா சலியான் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்