நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் .!பிரபல நடிகை மீது வழக்கு பதிவு.!

Published by
Ragi

மறைந்த. சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு அவரது காதலி மற்றும் நடிகையான ரியா சக்கரபோர்த்தி தான் காரணம் என்று கூறி பீகார் மாநிலத்தில் உள்ள ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வருவதோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதனையடுத்து பாலிவுட் திரையுலகில் உள்ள சல்மான்கான்,கரன்ஜோகர் , சஞ்சய் லீலா பன்சாலி ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் தான் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்று கூறி பீகாரில் உள்ள முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் அவரது காதலியான ரியா சக்கரபோர்த்தி என்று கூறி பீகார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே ரியாவிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தியதும் ,அவர் சுஷாந்த் குறித்து பல தகவல்களை கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

டிச 22 உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

டிச 22 உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

20 minutes ago

பெண் எம்.பியை அவமதித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! வானதி சீனிவாசன் கண்டனம்!

டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…

33 minutes ago

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

12 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

14 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

14 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

16 hours ago