நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்…! மார்ச்-10 முதல் திரையரங்குகளில்..!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#EtharkkumThunindhavan is releasing on March 10th, 2022!
See you soon in theatres!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial #ETfromMarch10 #ET pic.twitter.com/HPJ9cYw9Eh— Sun Pictures (@sunpictures) February 1, 2022