250 பேருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா..!

- ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 பேருக்கு தலா ரூ.5,000 வழங்கி உதவிய நடிகர் சூர்யா.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஜூன் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பலர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றார்கள். இதனால் ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 பேருக்கு தலா ரூ.5,000 வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.