சிவகார்த்திகேயனின் டான் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் நடிகர் சூரி இணைந்துள்ளார் .
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.அதனை தொடர்ந்து டான் படத்தில் முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகிய மூன்று காமெடி நடிகர்களும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர் .
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது .இதில் நேற்று முன்தினம் பூமிநாதன் கேரக்டரில் வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யா கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் டான் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் சூரி கலந்து கொண்டுள்ளார் . வித்தியாசமான கெட்டப்பில் உள்ள சூரியை டான் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர்.
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில்…
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த…
சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர்…
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி…
சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில்…