நடிகர் சோனு சூட் கட்டுமான பணிகளில் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர் – மும்பை மாநகராட்சி!
கட்டிடங்களை கட்டுவதில் குற்றம் செய்வதையே தனது பழக்கமாக கொண்டவர்தான் நடிகர் சோனு சூட் என மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு அரசியல்வதிகளும், தன்னார்வலர்களும் அரசாங்கமும் நிதி உதவிகளை மக்களுக்கு செய்து வந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே மக்களுக்கு உதவி வந்தனர். ஆனால் நடிகர் சோனு சூட் தற்பொழுது வரையிலும் தனது சொத்துக்களை கூட அடமானம் வைத்து பிறருக்கு உதவி வருகிறார். அண்மையில் 6 தளங்கள் கொண்ட தனது அடுக்குமாடி குடியிருப்பை சட்டத்துக்குப் புறம்பாக உரிமையின்றி உணவகம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் வணிக வளாகமாக மாற்றியிருந்தார்.
இது குறித்து மும்பை மாநகராட்சி நடிகர் சோனு சூட் மீது குற்றம் சாட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி தாக்கல் செய்துள்ள ஒரு பத்திரத்தில், 2018 ஆம் ஆண்டு சோனு சூட் கட்டிய ஒரு சட்டவிரோதமானது என இடித்த பின்பும் அவர் அந்த இடத்தில மறுபடியும், சட்டவிரோதமாக கட்டுமானங்களை மேற்கொண்டதாக கூறியுள்ளது. மேலும் உணவகம் வணிக வளாகங்களை பொது மக்கள் இருக்கும் இடத்தில வைக்க முறையான எந்த உரிமமும் பெறாமல் தனது அடுக்குமாடி குடியிருப்பை கொடுத்தது தவறு எனவும், கட்டுமான பணிகள் மற்றும் கட்டிடம் கட்டுவதில் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர் சோனு சூட் எனவும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.